தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக்கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
சமீபத்தில், இப்படத்தின் எட்டு பாடல்களை ரிலீஸ் செய்தனர். தற்போது, படத்தின் ‘Quit பண்ணுடா’ பாடலின் ஸ்பெஷல் லிரிக் வீடியோ பதிவை இதன் இசையமைப்பாளர் ‘ராக்ஸ்டார்’ அனிருத்தின் பர்த்டே சர்ப்ரைஸாக வெளியிடப்பட்டுள்ளது. இவ்வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த பாடலை ‘ராக்ஸ்டார்’ அனிருத்தே பாடியுள்ளார். இப்பாடலின் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.
Yes #Master ! #QuitPannuda is here
https://t.co/5qf4GsgQqT#Thalapathy @actorvijay @Dir_Lokesh @Jagadishbliss @VigneshShivN @Lalit_SevenScr @XBFilmCreators
— Anirudh Ravichander (@anirudhofficial) October 16, 2020