ஆகஸ்ட் 14-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீஸாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’?

  • August 10, 2020 / 03:59 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக்கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில், பிரபல OTT நிறுவனமான ‘அமேசான் ப்ரைம்’ ட்விட்டரில் இம்மாதம் ரிலீஸ் செய்யப்போகும் படங்களின் லிஸ்டை அறிவித்துள்ளது. அந்த லிஸ்டில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி ‘மாஸ்டர்’ ரிலீஸாகும் என்று இருப்பதால், விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், அமேசான் குறிப்பிட்டிருக்கும் ‘மாஸ்டர்’, நமது விஜய் நடித்த படம் இல்லையாம். கொரியனில் 2016-ஆம் ஆண்டு இதே பெயரில் ஒரு படம் வெளி வந்தது. அப்படத்தை தான் அமேசான் OTT-யில் ரிலீஸ் செய்யப்போகிறதாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus