விஜய்யின் “மாஸ்டர்” படத்தின் டீசர் படைத்த சாதனை!

  • November 16, 2020 / 06:58 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பல நாட்களாக தள்ளிப் போன இந்த படத்தின் அப்டேட்கள் விரைவில் வரும் என்று திரைப்படக் குழு தெரிவித்ததை அடுத்து தற்போது தீபாவளியன்று இந்த படத்தின் டீசர் வெளியானது.

தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விஜய் ரசிகர்களுக்கு கிடைத்த இந்த ட்ரீட் அவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இந்த டீஸரை வைரலாக்கி வந்தனர்.

தற்போது மாஸ்டர் டீசர் சுமார் 24 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. மேலும் 1.8 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்று இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து “மாஸ்டர்” டீசருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus