அடேங்கப்பா… விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசருக்கு யூடியூபில் இத்தனை கோடி வியூஸா?

  • November 26, 2020 / 08:09 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். படம் பொங்கலுக்கு ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், இப்படத்தின் எட்டு பாடல்களை ரிலீஸ் செய்தனர்.

கடந்த நவம்பர் 14-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக விஜய்யின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர். தற்போது, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை யூடியூபில் 4 கோடி வியூஸுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை தயாரிப்பு நிறுவனமே ட்விட்டரில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus