அடேங்கப்பா… ‘மாஸ்டர், விக்ரம்’ படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

  • December 17, 2021 / 06:48 PM IST

2016-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆந்தாலஜி படம் ‘அவியல்’. இதில் ‘களம்’ என்ற கதையை மட்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அதன் பிறகு லோகேஷ் இயக்கிய படம் ‘மாநகரம்’. ஹைப்பர் லிங்க் படமான இதில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கசாண்ட்ரா, சார்லி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் சூப்பர் ஹிட்டானதும், லோகேஷுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்ததாக கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தினை இயக்கினார். ஆக்ஷன் த்ரில்லர் படமான இது 2019-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. இப்படம் ரிலீஸாவதற்கு முன்பே, விஜய்க்கு கதை சொல்லி ‘மாஸ்டர்’ படத்துக்கான வேலைகளை துவங்கி விட்டார். இந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ‘மாஸ்டர்’ ரிலீஸானது. இந்த படமும் மெகா ஹிட்டானது.

இப்போது கமலை வைத்து இயக்கும் ‘விக்ரம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘கைதி’ அர்ஜுன் தாஸ் – நரேன், காளிதாஸ் ஜெயராம், ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர். படத்தை அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு ரூ.11 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus