சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் படங்களின் லிஸ்ட் இதோ…
1.பிச்சைக்காரன் 2 :
சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் ‘பிச்சைக்காரன் 2, அக்னிச் சிறகுகள், காக்கி, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில்’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிப்பதுடன், அவரே இப்படத்தை தயாரித்து, இசையமைத்து, இயக்கியுள்ளார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் காவ்யா தபார், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், ராதாரவி, மன்சூர் அலிகான், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதற்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை வருகிற மே 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
2.யாதும் ஊரே யாவரும் கேளிர் :
சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.
இப்போது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தை வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.
மேலும், முக்கிய ரோல்களில் கனிகா, ரித்விகா, மோகன் ராஜா, விவேக், மகிழ் திருமேனி ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தை வருகிற மே 19-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
3.கருங்காப்பியம் :
திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், கருங்காப்பியம்’, ஹிந்தியில் ‘உமா’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘கருங்காப்பியம்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான டி.கார்த்திகேயன் இயக்கியுள்ளார். இதில் காஜல் அகர்வாலுடன் இணைந்து நடிகைகள் ரெஜினா, ஜனனி அய்யர் இருவரும் நடித்துள்ளார்கள்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் கலையரசன், யோகி பாபு, ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை வருகிற மே 19-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.