மே 26-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

  • May 25, 2023 / 06:52 PM IST

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் ஹீரோக்கள். இந்த வாரம் மே 26-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் படங்களின் லிஸ்ட் இதோ…

1.கழுவேத்தி மூர்க்கன் :

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருள்நிதி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. இந்த படத்தை இயக்குநர் சை.கெளதமராஜ் இயக்கியுள்ளார்.

இதில் அருள்நிதிக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத் லோஹிதஸ்வா, ராஜ சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு டி.இமான் இசையமைத்துள்ளார், ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஒலிம்பியா மூவீஸ்’ என்ற நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட இந்த படத்தின் பாடல்கள், டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

2.தீராக் காதல் :

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெய். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘தீராக் காதல்’. இந்த படத்தை இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இதற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார், ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா.ஜி.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

3.காசேதான் கடவுளடா :

1972-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் ‘காசேதான் கடவுளடா’. இந்த படத்தில் ஹீரோவாக முத்துராமன் நடித்திருந்தார். சித்ராலயா கோபு இயக்கியிருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது.

இப்படத்தின் ரீமேக் வெர்ஷனில் ஹீரோவாக மிர்ச்சி சிவா நடித்துள்ளார். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, ஊர்வசி, VTV கணேஷ், கருணாகரன், மனோபாலா, புகழ், ஷிவாங்கி, தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில், வெளியிடப்பட்ட இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus