இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகும் தமிழ் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் லிஸ்ட்!

  • May 24, 2023 / 12:50 PM IST

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகும் தமிழ் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் லிஸ்ட் இதோ…

1.மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் வரலக்ஷ்மி சரத்குமார். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படமான ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ நேற்று (மே 19-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘ஆஹா’வில் ரிலீஸானது. இந்த படத்தை பிரபல இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ‘பிக் பாஸ்’ ஆரவ், சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, யாசர், விவேக் ராஜகோபால், அமித் பார்கவ், சுப்பிரமணிய சிவா, யாஷ் ஷெட்டி, ரவி வெங்கட்ராமன், ஸ்ருதி நாயக் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு மனிகாந்த் கத்ரி இசையமைத்துள்ளார், சேகர் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

2.மாடர்ன் லவ் சென்னை :

புதிய ஆந்தாலஜி வெப் சீரிஸான ‘மாடர்ன் லவ் சென்னை’ கடந்த மே 18-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-ல் ரிலீஸானது. இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ள ‘லாலாகுண்டா பொம்மைகள்’ -ல் ஸ்ரீ கௌரி ப்ரியா, வசுந்தரா, வாசுதேவன் முரளி நடித்துள்ளனர். இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள ‘இமைகள்’-ல் அசோக் செல்வன், டி.ஜே.பானு நடித்துள்ளனர். இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கிற எமோஜி’-ல் ரித்து வர்மா நடித்துள்ளார். இயக்குநர் அக்ஷய் சுந்தர் இயக்கியுள்ள ‘மார்கழி’-ல் சஞ்சுலா சாரதி நடித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜா இயக்கியுள்ள ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’-ல் கிஷோர், ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி நடித்துள்ளனர். இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள ‘நினைவோ ஒரு பறவை’-ல் வாமிகா கபி, பி.பி நடித்துள்ளனர்.

3.விரூபாக்ஷா :

தெலுங்கு சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சாய் தரம் தேஜ். இவர் நடித்த ‘விரூபாக்ஷா’ என்ற படம் சமீபத்தில் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்துக்கு சுகுமார் திரைக்கதை எழுத, கார்த்திக் வர்மா தண்டு இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இப்படம் நாளை (மே 21-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’ல் ரிலீஸாகவுள்ளது.

4.தெய்வ மச்சான் :

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விமல். இவர் நடித்த ‘தெய்வ மச்சான்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் மார்டின் நிர்மல் குமார் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் அனிதா சம்பத், பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், பால சரவணன், ‘கிச்சா’ ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் இந்த வாரம் பிரபல OTT தளமான ‘சிம்ப்ளி சவுத்’ல் ரிலீஸாகவுள்ளது.

5.தக்ஸ் :

தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குநராக வலம் வருபவர் பிருந்தா. இவர் இயக்கிய ‘தக்ஸ்’ என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தில் ஹீரோவாக ஹிருது ஹாரூன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வரா ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் இன்று (மே 20-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘ஜியோ சினிமா’வில் ரிலீஸாகியுள்ளது.

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus