நம்ம ‘தெறி’ பேபி நைனிகாவா இது?… லேட்டஸ்ட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

  • September 17, 2021 / 01:34 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக மீனா அறிமுகமான தமிழ் படம் ‘நெஞ்சங்கள்’. அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவை ‘நவயுகம்’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது திரையுலகம். தமிழில் ‘என் ராசாவின் மனசிலே’வில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார்.

இந்த படத்துக்கு பிறகு மீனாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘எஜமான், சேதுபதி IPS, வீரா, ராஜகுமாரன், நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, ரிதம், சிட்டிசன்’ என படங்கள் குவிந்தது. 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீனா. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் ‘தெறி’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் விஜய்யின் மகளாக நடித்திருந்தார்.

மீனா தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது மீனா நடிப்பில் தமிழில் ரஜினியின் ‘அண்ணாத்த’, தெலுங்கில் வெங்கடேஷின் ‘த்ருஷ்யம் 2’, மலையாளத்தில் மோகன்லாலின் ‘ப்ரோ டாடி’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளுடன் எடுத்துக்கொண்ட அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

1

2

3

4

5

6

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus