தென்னிந்திய திரைப்படத் துறையிலும் ஹிந்தி சினிமாவிலும் முக்கியமாகப் பணியாற்றும் நடிகையாக திகழ்ந்தார் நடிகை மீனா . தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்து பல மொழி ரசிகர்களை கவர்ந்த நடிகை மீனா .
மீனா 1982 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் . இவர் ரஜினிகாந்துடன் எங்கேயோ கேட்ட குரல் மற்றும் அன்புள்ள ரஜினிகாந்த் ஆகிய இரண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார் .
ரஜினி , கமல் , கார்த்திக் , பிரபு , அஜித், விஜய் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் . இந்நிலையில் நடிகை மீனா சமீபத்தில் பேட்டி கொடுத்து இருந்தார் .
அதில் நடிகர் அஜித் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி படம் குறித்து பேசி உள்ளார் . அதில் வாலி படம் தான் நடிக்க வேண்டியது ஆனால் அப்போது தனக்கு கால்ஷீட் பிரச்சனை அதன் காரணமாக நடிக்க முடியாமல் போனது என்று தெரிவித்துள்ளார் .