உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பரிச்சயமான மீராமிதுன், தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களில் சிக்கி தற்போது ட்விட்டரில் தன் நெகடிவ் கமெண்ட் மூலம் வைரலாகி வருகிறார்.
முன்னணி நட்சத்திரங்கள் குறித்து வசைபாடி வரும் மீராமிதுனை பலரும் கோபத்துடன் திட்டியும் கலாய்த்தும் வருகிறார்கள். சமீபத்தில் இவர் விஜய் மற்றும் சூர்யா பற்றி பேசியதற்கு அவரது ரசிகர்கள் மீரா மிதுன் இவர்களிடம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் மீராமிதுன் இதை ஒரு நெகடிவ் பப்ளிசிட்டிக்காக செய்கிறார் என்று பலர் தங்களது கருத்துக்களை கூறுகிறார்கள்.
இந்நிலையில் தற்போது மீரா மிதுன் அதிரடியாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் டெல்லியில் தான் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கவிருப்பதாகவும் அதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் மீரா மிதுன் குறிப்பிட்டுள்ளதாவது “வருகிற விநாயகர் சதுர்த்தியன்று நான் என்னுடைய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளேன். புதிய சூரியன் உதயமாகிறது. எனக்கு ஆதரவு தெரிவித்தவர்கள், பைனான்சியர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எனது நன்றி. திறப்பு விழா டெல்லியில் நடக்கவுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபகாலமாக நெப்போடிசம் குறித்து தனது கருத்துக்களை பேசிவந்த மீரா மிதுன், விஜய், சூர்யா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், கமல்ஹாசன், மாளவிகா மோகனன், தனுஷ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களை பற்றி தனது தவறான கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.
https://twitter.com/meera_mitun/status/1291702831301328897?s=19
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இவரை குற்றம் கூறி வரும் இந்த நேரத்தில் இவர் புரோடக்சன் கம்பெனி ஆரம்பிப்பதை பற்றி தற்போது செய்தி வெளியிட்டுள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.