சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வம்பிழுக்கும் மீராமிதுன்!

  • August 17, 2020 / 09:35 AM IST

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பரிச்சயமான மீராமிதுன், தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களில் சிக்கி தற்போது ட்விட்டரில் தன் சர்ச்சைக்குரிய கமெண்ட் மூலம் வைரலாகி வருகிறார்.

முன்னணி நட்சத்திரங்கள் குறித்து வசைபாடி வரும் மீராமிதுனை பலரும் கோபத்துடன் திட்டியும் கலாய்த்தும் வருகிறார்கள். சமீபத்தில் இவர் விஜய் மற்றும் சூர்யா பற்றி பேசியதற்கு அவரது ரசிகர்கள் மீராமிதுன் இவர்களிடம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் மீராமிதுன் இதை ஒரு நெகடிவ் பப்ளிசிட்டிக்காக செய்கிறார் என்று பலர் தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். இவர் பிரபல நட்சத்திரங்கள் மற்றும் அவர்கள் குடும்பம் பற்றி கொச்சையாக பேசி வருகிறார்.

இதற்கு கடந்த சில நாட்களாக வைரமுத்து, பாரதிராஜா, சூர்யா, விவேக் என்று பலரும் அவருக்கு அட்வைஸ் செய்து பதிவுகளை வெளியிட்டார்கள். ஆனால் இவர்கள் இந்த பதிவுக்கும் நெகட்டிவாக கமெண்ட் செய்து பேசியுள்ள மீராமிதுன் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் விட்டுவைக்கவில்லை.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 45 ஆண்டுகள் சினிமாவில் நிறைவடைந்ததை அவரது ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடி வருகிறார். ஏற்கனவே இவர் தனியாக கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும், 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அதிரடியாக அறிக்கை ஒன்றை விடுத்தார்.

அறிக்கை விடுத்ததிலிருந்து அதிகமாக அரசியல் வேலையில் ஈடுபடாத ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவார் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

https://twitter.com/meera_mitun/status/1294281975453200385

இந்நிலையில் ஏற்கனவே விஜய், சூர்யா போன்ற பெரிய நட்சத்திரங்களை வம்பிழுத்து வரும் மீராமிதுன் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை குறிப்பிட்டு, நீங்கள் பஸ் கண்டக்டராக இருந்து பின்பு நடிகராக மாறி இவ்வளவு தூரம் திரையுலகில் சாதனை படைத்ததை நான் என்றும் மதிக்கிறேன். ஆனால் அரசியலில் ஈடுபடுவது உங்களுக்கு நல்லதல்ல என்று சர்ச்சைக்குரிய விதமாக பதிவிட்டுள்ளார்.

இதனால் விஜய் சூர்யா ரசிகர்களுடன் தற்போது ரஜினி ரசிகர்களும் சேர்ந்து மீராமிதுனின் மீது செம கடுப்பில் இருக்கிறார்கள். கோலிவுட்டில் அனைவரையும் பகைத்து வருகிறார் மீரா மிதுன்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus