உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பரிச்சயமான மீராமிதுன், தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களில் சிக்கி தற்போது ட்விட்டரில் தன் சர்ச்சைக்குரிய கமெண்ட் மூலம் வைரலாகி வருகிறார்.
முன்னணி நட்சத்திரங்கள் குறித்து வசைபாடி வரும் மீராமிதுனை பலரும் கோபத்துடன் திட்டியும் கலாய்த்தும் வருகிறார்கள். சமீபத்தில் இவர் விஜய் மற்றும் சூர்யா பற்றி பேசியதற்கு அவரது ரசிகர்கள் மீராமிதுன் இவர்களிடம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் மீராமிதுன் இதை ஒரு நெகடிவ் பப்ளிசிட்டிக்காக செய்கிறார் என்று பலர் தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். இவர் பிரபல நட்சத்திரங்கள் மற்றும் அவர்கள் குடும்பம் பற்றி கொச்சையாக பேசி வருகிறார்.
இதனால் கோபமடைந்த பல ரசிகர்கள் இவரை வீடியோக்கள் வெளியிட்டு மிரட்டியும் தமிழ்நாடு பக்கம் வந்து பாருங்கள் என்று பேசியும் வருகிறார்கள். அதையும் தன் ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்து வருகிறார் மீராமிதுன்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கவிடாமல் செய்து விடுவேன் என்று உலக நாயகன் கமல்ஹாசனின் மிரட்டி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் மீராமிதுன். இதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தான் நடித்த கிளாமர் வீடியோ ஒன்றை டிரன்ட் லௌட் நிறுவனம் வெளியிடாமல் இருப்பதற்கு கமல்ஹாசன் தான் காரணம் என்றும் அதை வெளியிடாமல் செய்தால் உலக நாயகன் கமல்ஹாசனை பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் இருந்து நிறுத்தி விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார் மீராமிதுன்.
https://twitter.com/meera_mitun/status/1303248226854686720?s=19