சமீபகாலமாக இணையதளத்தில் தனக்குத்தானே பெரிய நட்சத்திரங்களுடன் ஒப்பிட்டு சர்ச்சையை கிளப்பி வருபவர் நடிகை மீராமிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பரிச்சயமான நடிகை மீரா மிதுன் ஏதாவது ஒரு சர்ச்சையான பதிவை வெளியிட்டு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை த்ரிஷா, நயன்தாரா போன்ற பெரிய நட்சத்திர நடிகைகளை சாடி, டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிவந்தார். இதை பலவாறு பலரும் கலாய்த்து தள்ளினார்கள்.
அதைத்தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் ஆகியோரை குறிப்பிட்டு அவர்களின் ஜாதியையும் மதத்தையும் ஒப்பிட்டு பெரிய சர்ச்சையை சமீபத்தில் கிளப்பினார். இதனால் சூப்பர் ஸ்டார் மற்றும் தளபதி ரசிகர்கள் இவர் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
இவர் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது அரசியல் பிரபலங்களையும் வம்புக்கு இழுத்து வந்தார். இப்படி தன்னைத்தானே பெரிய நட்சத்திரமாய் கருதி பெரிய பெரிய பிரபலங்களுடன் தன்னை ஒப்பிட்டு சர்ச்சையைக் கிளப்பி வரும் மீரா மிதுன், தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ” நாங்கள் இருவரும் சேர்ந்து புது சகாப்தத்தை உருவாக்குவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இருவரும் சேர்ந்து ஜெயித்துக்காட்டுவோம் என்று கூறியுள்ளார். இதை பலரும் பலவாறு கிண்டலடித்து கலாய்த்து பதிவிட்டு வருகிறார்கள்.