உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சைக்குரிய விஷயங்களில் பின்பு சிக்கிய நடிகை மீராமிதுன், சமீபத்தில் சினிமா பிரபலங்களை வசைபாடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.
சமீபகாலமாகவே பிரபலங்கள் குறித்து சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு வரும் மீராமிதுன், நடிகர் சூர்யா மற்றும் விஜய் குறித்து தவறான கருத்துக்களையும், அவர் குடும்பம் குறித்து தவறான கருத்துக்களையும் தற்போது பதிவிட்டார்.
இது இணையதளத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மீராமிதுனை சரமாரியாக திட்டி வருகிறார்கள். மேலும் மீரா மிதுன் நெகட்டிவ் பப்ளிசிட்டிக்காக தான் இப்படி செய்கிறார் என்று பலரும் வசைபாடி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது மீராமிதுன் நடிகர் விஷால் குறித்து பேசிய ஆடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஆடியோவில் மீராமிதுன் விஷால் துரத்தித் துரத்தி தன்னைக் காதலித்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மீராமிதுனின் தாயிடம் அடிக்கடி போன் செய்து பேசி வந்ததாகவும் அந்த ஆடியோ பதிவில் மீராமிதுன் கூறியுள்ளார். தற்போது இந்த ஆடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
https://youtu.be/dsrNi4kVU5U