இவர்தான் மீராமிதுனின் காதலனா ?- வைரலாகும் புகைப்படம்!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பரிச்சயமான மீராமிதுன், தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களில் சிக்கி தற்போது ட்விட்டரில் தன் சர்ச்சைக்குரிய கமெண்ட் மூலம் வைரலாகி வருகிறார்.

முன்னணி நட்சத்திரங்கள் குறித்து வசைபாடி வரும் மீராமிதுனை பலரும் கோபத்துடன் திட்டியும் கலாய்த்தும் வருகிறார்கள். சமீபத்தில் இவர் விஜய் மற்றும் சூர்யா பற்றி பேசியதற்கு அவரது ரசிகர்கள் மீராமிதுன் இவர்களிடம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் மீராமிதுன் இதை ஒரு நெகடிவ் பப்ளிசிட்டிக்காக செய்கிறார் என்று பலர் தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். இவர் பிரபல நட்சத்திரங்கள் மற்றும் அவர்கள் குடும்பம் பற்றி கொச்சையாக பேசி வருகிறார்.

இதனால் கோபமடைந்த பல ரசிகர்கள் இவரை வீடியோக்கள் வெளியிட்டு மிரட்டியும் தமிழ்நாடு பக்கம் வந்து பாருங்கள் என்று பேசியும் வருகிறார்கள். அதையும் தன் ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்து வருகிறார் மீராமிதுன்.

இந்நிலையில் தற்போது ஒரு வாலிபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, சேலஞ்ச் அக்செப்டட்.. கப்புல் கோல்ஸ்.. என்று குறிப்பிட்டுள்ளார். இவர்தான் உங்கள் காதலனா என்று பலரும் இந்த புகைப்படத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Share.