கமல்ஹாசன்,விஜய், சூர்யாவை சாடி சர்ச்சையான பதிவை வெளியிட்ட மீராமிதுன்!
July 31, 2020 / 10:11 PM IST
|Follow Us
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சைக்குரிய விஷயங்களில் பின்பு சிக்கிய நடிகை மீரா மிதுன், தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபகாலமாக நடிகை மீரா மிதுன் பிரபலங்களை சாடி சர்ச்சைக்குரிய பதிவுகளை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமின்றி கோலிவுட்டில் நடக்கும் நெப்போடிசம் குறித்தும், குரூப்பிசம் குறித்தும் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
அவ்வாறு பேசும் பொழுது தற்போது உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் மற்றும் சூர்யா குடும்பத்தினரால் குரூப்பிசம் நடைபெற்றது வருகிறது என்று குறைகூறியுள்ளார்.
மேலும் இவர், நடிகர் சூர்யாவுக்கு நடிப்பென்றால் என்னன்னே தெரியாது, “தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் இவருடன் நடித்த அனுபவம் எனக்கு இருக்கிறது. ஒரு ஷாட்டுக்கு அவ்வளவு டேக் எடுப்பார்.நெப்போடிசம் மட்டும் இல்லையென்றால் இவர் வளர்ந்து இருக்கவே முடியாது என்று கூறி பதிவிட்டு அதை பதிவிட்ட சில நிமிடங்களிலேயே நீக்கி விட்டாராம் மீராமிதுன். இதனால் சூர்யா ரசிகர்கள் மீரா மிதுன் மீது கடும் கோபத்தில் உள்ளார்கள்.
அதுமட்டுமின்றி நெப்போடிசம் குறித்து நட்டி, சாந்தனு பாக்கியராஜ் ஆகியோர் கருத்துக்களை கிண்டல் செய்தும் இவர் வீடியோவில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் கோலிவுட் சினிமாவில் மாபியா இல்லை என்று யாராவது தைரியம் இருந்தால் ப்ரூஃப் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் எந்த பிரச்சனை நடந்து வந்தாலும் மீரா மிதுன் ஏதாவது ஒரு சர்ச்சையான பதிவை வெளியிட்டு தன் வேலையை செய்துதான் வருகிறார் என்று நெட்டிசன்கள் அவரை கலாய்த்து தள்ளுகிறார்கள்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.