இந்த லாக்டவுனில் பல சினிமா பிரபலங்களின் திருமணங்கள் அவர்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இனிதே நடந்தேறியுள்ளது. சமீபத்தில் தெலுங்கு ஹீரோ ராணா டகுபதி மற்றும் மிகிகா பஜாஜ் திருமணம் நடந்தது.
இதைத் தொடர்ந்து தற்போது மெர்சல் படத்தில் நடித்த நடிகர் பரத் ராஜ் திருமணம் ரகசியமாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ நடந்தேறியுள்ளது.
இவர் தற்போது தன் திருமண புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சினிமா பிரபலங்கள் மற்றும் இவரது ரசிகர்கள் என அனைவரும் கமெண்டில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இவர் “ஆசீர்வதிக்கப் பட்டுள்ளேன். புதிய தொடக்கம்” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் பரத் ராஜ் மெர்சல் அடங்கமறு போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர். அதுமட்டுமின்றி பெரிய ஃபிட்னஸ் ஃபிரீக்கான பரத் ராஜ் பாடி பில்டிங் காம்பெடிஷன்களில் கலந்து கொண்டு பரிசு பெற்றவரும் ஆவார்.
தற்போது இவரது திருமண புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
🙏🏼😇BLESSED😇🙏🏼 #bratzlife #thebeginning #life #family #forever
A post shared by Bharat Raj (@bharat_raj_official) on