நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, மேலும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. எப்போது படப்பிடிப்புகள் நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கும் என்று தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
பெரிய முன்னணி நட்சத்திரங்களின் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிப்பில் “அண்ணாத்த”, அஜித் நடிப்பில் “வலிமை”, சூர்யா நடிப்பில் “வாடிவாசல்”, விக்ரம் நடிப்பில் “கோப்ரா” போன்ற படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் மாநில அமைச்சர் கடம்பூர் ராஜுவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். இந்த பேச்சுவார்த்தையில் கடம்பூர் ராஜு அவர்கள் தற்போது நிலைமை மோசமாக உள்ளதாகவும், அதனால் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதி கிடைப்பதற்கு அல்லது திரையரங்குகள் திறப்பதற்கான நிலையோ இன்னும் உருவாகவில்லை என்று கூறியுள்ளார்.
இதனால் தற்போதைக்கு படப்பிடிப்புகள் நடத்தப்படுவதற்கு அரசு அனுமதி அளிக்காது என்றும் திரையரங்குகள் திறக்கப்படாது என்றும் உறுதியாகியுள்ளது. இந்த செய்தி சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், படப்பிடிப்பு நடக்கும் பொழுது இருக்கும் மக்களின் பாதுகாப்பு கருதியே இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதால் அனைவரும் இதை வரவேற்கிறார்கள்.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.