உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சைக்குரிய விஷயங்களில் பின்பு சிக்கிய நடிகை மீராமிதுன், தற்போது ஒரு சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவர் நடிகை திரிஷா கடைசியாக வெளியிட்ட புகைப்படத்தை சுட்டிக்காட்டி தன் புகைப்படத்தை மார்ஃப் செய்துள்ளதாகவும், இதை திரிஷா மீண்டும் தொடர்ந்தால் சட்டரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டு சமீபத்தில் சர்ச்சையை கிளப்பினார்.
மீண்டும் அதை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய் பற்றி மீராமிதுன் சர்ச்சையான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மீராமிதுன் குறிப்பிட்டுள்ளதாவது ” தமிழ்நாடு என்னை புறக்கணித்து விட்டது. அதனால்தான் நான் இப்போது ஒரு சூப்பர் மாடலாக இருக்கிறேன். கோலிவுட் எனக்கு எதிராக திரும்பியதால்தான் நான் இப்போது பாலிவுட்டிலும் ஹாலிவுட்டிலும் ஜொலிக்கிறேன். நான் தமிழ்நாட்டை விட்டு தள்ளி இருந்தாலும் ஏன் எனக்கு தமிழ்நாடு பிரச்சினை தந்து கொண்டிருக்கிறது. மதுரையை கண்ணகி எரித்தது போல், தமிழ்நாட்டை அழிக்க வேண்டும் என்று எனக்கு கோபம் வருகிறது. நரேந்திர மோடி தமிழ்நாட்டை அழித்துவிடுங்கள். நான் தமிழ்நாட்டை விட நல்ல சொகுசான இடத்தில் இருக்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய் என்னை டீஃபேம் செய்ய பார்க்கிறார்கள். இதனால் இவர்களை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன். கடவுள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்” என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.
இந்தப் பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது, மேலும் நெட்டிசன்கள் இவரை கலாய்த்து தள்ளுகிறார்கள்.