‘சென்னை 28’, படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் மிர்ச்சி சிவா. இவர் நடிப்பில் வெளியான தமிழ் படம் இவரை அகில உலக சூப்பர்ஸ்டார் ஆக்கியது . சரோஜா , கலகலப்பு , தில்லு முள்ளு உள்ளிட்ட பட ஹிட் படங்களில் நடித்து உள்ளார் .
மிர்ச்சி சிவா தற்போது ‘கன்னிராசி’, ‘தர்மபிரபு’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் முத்து குமரன் இயக்கத்தில் ‘சலூன் – எல்லா மயிரும் ஒன்னுதான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரேதன் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். அழர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் யோகி பாபு தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
மிர்ச்சி சிவாவின் கெட்டப் வித்தியாசமாக உள்ளதால் ரசிகர்கள் இதை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர் .