வைரலாகும் மிர்னாலினி ரவி லேட்டஸ்ட் போட்டோஷூட் !

  • February 2, 2023 / 08:50 AM IST

டிக் டாக் மற்றும் டப்ஸ்மாஷ் வழியாக ஆயிரக்கணக்கான தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மிர்னாலினி ரவி. இவர் செய்த டப்ஸ்மாஷ் வீடியோ அனைத்தும் வைரலாகியது . இந்நிலையில் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் வந்தன. அந்த வகையில் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ் . இந்த படத்தில் விஜய் சேதுபதி , ஃபகத் பாசில் , சமந்தா என பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர் .இந்த படத்தில் மிர்னாலினி ரவி துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . இந்த படத்தை தொடர்ந்து சாம்பியன் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் .

இதை தொடர்ந்து எனிமி , ஜாங்கோ , எம்.ஜி.ஆர் மகன் போன்ற படங்களில் நடித்தார் . இந்த படங்கள் அனைத்தும் பெரிதாக வெற்றி பெறவில்லை இருந்தாலும் எனிமி படத்தில் இருந்து வெளியான “டம் டம் ” என்கிற பாடல் மட்டும் வைரல் ஆனது . இந்நிலையில் மிர்னாலினி ரவி அடுத்து கோப்ரா படத்தில் நடித்து இருந்தார் . இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்து இருந்தார் . இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி இருந்தார் . இந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை .

மிர்னாலினி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர் அந்த வகையில் தற்போது இவர் புதிய போட்டோஷூட் படங்களை பகிர்ந்து உள்ளார் . தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது .

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus