மிருணாளினி ரவியின் அசத்தலான லேட்டஸ்ட் கிளிக்ஸ் !

  • July 13, 2022 / 11:02 PM IST

டிக் டாக் மற்றும் டப்ஸ்மாஷ் வழியாக ஆயிரக்கணக்கான தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மிர்னாலினி ரவி. இவர் செய்த டப்ஸ்மாஷ் வீடியோ அனைத்தும் வைரலாகியது . இந்நிலையில் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் வந்தன. அந்த வகையில் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ் . இந்த படத்தில் விஜய் சேதுபதி , ஃபகத் பாசில் , சமந்தா என பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர் .இந்த படத்தில் மிர்னாலினி ரவி துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . இந்த படத்தை தொடர்ந்து சாம்பியன் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் .

இதை தொடர்ந்து எனிமி , ஜாங்கோ , எம்.ஜி.ஆர் மகன் போன்ற படங்களில் நடித்தார் . இந்த படங்கள் அனைத்தும் பெரிதாக வெற்றி பெறவில்லை இருந்தாலும் எனிமி படத்தில் இருந்து வெளியான “டம் டம் ” என்கிற பாடல் மட்டும் வைரல் ஆனது . இந்நிலையில் மிர்னாலினி ரவி அடுத்து கோப்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார் .

கோப்ரா படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார் . இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார் .
படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது . இதில் படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரமும் கலந்து கொண்டு ரசிகர்களுடன் படத்தை பற்றி பேசி இருந்தனர் . இந்நிலையில் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது . இதனிடையே நடிகை மிருணாளினி ரவி இசை வெளியீட்டு விழாவில் எடுத்த புகைப்படங்கள் பகிர்ந்துள்ளார் . தற்போது அது வைரலாகி வருகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus