ட்ரெண்ட் ஆகும் மிர்னாலினியின் அசத்தல் போட்டோஷூட் !
February 14, 2023 / 06:12 PM IST
|Follow Us
டிக் டாக் மற்றும் டப்ஸ்மாஷ் வழியாக ஆயிரக்கணக்கான தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மிர்னாலினி ரவி. இவர் செய்த டப்ஸ்மாஷ் வீடியோ அனைத்தும் வைரலாகியது . இந்நிலையில் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் வந்தன. அந்த வகையில் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ் . இந்த படத்தில் விஜய் சேதுபதி , ஃபகத் பாசில் , சமந்தா என பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர் .இந்த படத்தில் மிர்னாலினி ரவி துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . இந்த படத்தை தொடர்ந்து சாம்பியன் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் .
இதை தொடர்ந்து எனிமி , ஜாங்கோ , எம்.ஜி.ஆர் மகன் போன்ற படங்களில் நடித்தார் . இந்த படங்கள் அனைத்தும் பெரிதாக வெற்றி பெறவில்லை இருந்தாலும் எனிமி படத்தில் இருந்து வெளியான “டம் டம் ” என்கிற பாடல் மட்டும் வைரல் ஆனது . அதன் பிறகு மிர்னாலினி ரவி நடித்த படம் கோப்ரா . இந்த படமும் இவருக்கு பெரிய அளவில் வெற்றியை தேடி தரவில்லை .
மிர்னாலினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் . அந்த வகையில் மிர்னாலினி தற்போது புதிய போட்டோஷூட் ஒன்றரை பதிவிட்டுள்ளார் . தற்போது இந்த போட்டோஷூட் வைரலாகி வருகிறது .