இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹரின் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம், தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் , பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்தது. இந்நிலையில் அரியவன் என்கிற படத்தை அவர் இயக்கி உள்ளார் என்று விளம்பரங்கள் வெளியானது . படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டபோது, அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் ‘இயக்குனர்’ இல்லாமல் சென்னை நகரில் நடந்து முடிந்தது . இந்நிலையில் மித்ரன் ஜவகர் அரியவன் படத்தை அவர் இயக்கவில்லை என்றும், தயாரிப்பாளர்கள் தனது பெயரை விளம்பரத்திற்காக தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “என்னுடன் உதவியாளராக பணியாற்றியவர்தான் அரியவன் படத்தை இயக்கியுள்ளார். டிஸ்கஷன், ஷூட்டிங் என சில நாட்கள் அவருக்கு உதவி செய்தேன். அவ்வளவுதான். இந்த படத்திற்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை. விளம்பரம் பெறுவதற்காகவே எனது பெயரை முன்னிலைப்படுத்த முயற்சிக்கின்றனர். இதை மக்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் .