‘கொரோனா’ லாக் டவுன்… ‘இன்று நேற்று நாளை’ ஹீரோயினுக்கு நிச்சயதார்த்தம்!

  • August 26, 2020 / 04:33 PM IST

‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ். இந்த லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருக்கிறது.

ஆகையால், இந்த நேரத்தை அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றி வருகிறார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். ‘அமர காவியம்’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை மியா ஜார்ஜ்.

அதன் பிறகு ‘இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, ரம், எமன்’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார். இப்போது, மியா ஜார்ஜ் நடிப்பில் மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், அஷ்வின் பிலிப்ஸ் என்பவரை மியா ஜார்ஜ் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த லாக் டவுன் டைமில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus