பிரபல பாடகரை தாக்கிய MLA மகன் ! வெளியான அதிர்ச்சி வீடியோ !

  • February 23, 2023 / 01:07 AM IST

இந்திய சினிமாவில் முன்னணி பாடகர்களில் ஒருவர் சோனு நிகாம். இவர் ஹிந்தி, கன்னடம், தமிழ் என அனைத்து மொழியிலும் பாடல் பாடியுள்ளார்.

இவர் தமிழில் பாடிய வாராயோ தோழி , மனசெல்லாம் மழையே உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை உள்ளது . கடந்த 2022 -ம் ஆண்டு சோனு நிகாம் அவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது கிடைத்தது .
சோனு நிகாம் அடிக்கடி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் . அந்த வகையில் மும்பையில் உள்ள செம்பூரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

அப்போது சிவசேனா கட்சியின் MLA வின் மகன், மேடையில் ஏறி சோனுவிடம் செல்ஃபீ எடுக்க முயன்றுள்ளார். அது நேரலை நிகழ்ச்சி என்பதால் சோனு செல்ஃபீ எடுக்க மறுத்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த MLA வின் மகன் அங்கு இருந்த பவுன்சர்களையும் சோனுவையும் கடுமையாக தாக்கியுள்ளனர். காயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது சோனு நிகாம் சிகிச்சை மூலம் குணமாகி வருகிறார். இந்நிலையில் சோனுவை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus