சண்டையால் விலகிய இயக்குநர்… ஹீரோ எடுத்த முடிவால் படமே ரிலீஸாகாது போலையே!

  • March 29, 2021 / 09:42 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அந்த ஆக்ஷன் ஹீரோ. தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் மாஸ் காட்டி வரும் இந்த ஹீரோவின் புதிய படம் சமீபத்தில் வெளியானது. ஆனால், அந்த சைபர் க்ரைம் த்ரில்லர் ஜானர் படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

அடுத்ததாக துப்பறியும் படத்தின் பார்ட் 2-விலும், எதிரி என்ற படத்திலும் நடித்து வருகிறார் அந்த ஆக்ஷன் ஹீரோ. அந்த துப்பறியும் படத்தின் பார்ட் 1 வெற்றிக்கு அதன் இயக்குநரின் திரைக்கதையும்,மேக்கிங்கும் தான் காரணம். பார்ட் 2-வையும் ஆரம்பத்தில் அதே இயக்குநர் தான் இயக்கி வந்தார்.

பின், சில பிரச்சனைகளால் அந்த இயக்குநர் படத்திலிருந்து விலகி விட்டார். அவர் விலகினால் என்ன? நானே பேலன்ஸ் படத்தை இயக்கி வெளியிடுகிறேன் என்று அந்த ஆக்ஷன் ஹீரோவே களமிறங்கினார். தற்போது, ஹீரோ ஷூட் செய்த காட்சிகளை எடிட் செய்து பார்த்திருக்கிறது படக்குழு. அந்த இயக்குநர் இயக்கிய காட்சிகளும், ஹீரோ இயக்கிய காட்சிகளும் ஒட்டாமல் தனியாக தெரிந்ததாம். ஆகையால், படத்தை ரிலீஸ் செய்யலாமா? வேண்டாமா? என்று படக்குழு யோசித்து வருகிறதாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus