நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த படங்கள்!

  • July 24, 2020 / 09:16 PM IST

1.பூவெல்லாம் கேட்டுப்பார்(1999):

வசந்த் இயக்கத்தில் பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் 1999ஆம் வருடம் வெளிவந்த “பூவெல்லாம் கேட்டுப்பார்” படத்தில் முதன்முதலாக நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா ஒன்றாக இணைந்து நடித்தார்கள். இந்தப் படத்திற்கு வசனங்களை கிரேசி மோகன் எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில், எம்.எஸ்.பிரபு இந்த படத்தின் காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆடை வடிவமைப்பாளரான ரேணுகா வசந்த் தமிழ்நாடு அரசின் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை இந்த படத்திற்கு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. உயிரிலே கலந்தது(2000):

கே.ஆர்.ஜெயா எழுதி இயக்கிய “உயிரிலே கலந்தது” படத்தில் இரண்டாவது முறையாக சூர்யாவும் ஜோதிகாவும் ஜோடி சேர்ந்தார்கள். இந்த படத்தை முத்தம் சிவகுமார் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் தன் இசைக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. காக்க காக்க(2003):

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2003-ஆம் வருடம் வெளிவந்த “காக்க காக்க” திரைப்படத்தில் நடிகர் சூர்யா மீண்டும் ஜோதிகாவுடன் இணைந்து நடித்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ஆர்.டி.ராஜசேகர் இந்த படத்தின் காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருந்தார். அந்தோணி எடிட்டிங் செய்திருந்தார். ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

4.பேரழகன்(2004):

சசி சங்கர் இயக்கத்தில் 2004ஆம் வருடம் வெளியான “பேரழகன்” படத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா டியூவல் ரோலில் நடித்திருப்பார்கள். இந்த படத்தை ஏவிஎம் புரொடக்சன்ஸ் தயாரித்திருந்தது. யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் இந்த படத்திற்கு பலம் சேர்த்தது. ரத்னவேலு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படத்தில் கூனன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சூர்யாவை இவர் நடிப்பிற்காக பலரும் பாராட்டினார்கள்.

5. மாயாவி(2005):

நடிகர் சிங்கம்புலி இயக்கத்தில் பாலா மற்றும் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிப்பில் வெளியான “மாயாவி” படத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ஜோதிகா நடிகை கதாபாத்திரத்திலேயே நடித்திருந்தார். தேவி ஸ்ரீபிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அதற்கு அடுத்த வருடம் சூர்யா மற்றும் ஜோதிகா திருமணம் செய்து கொண்டார்கள்.

6. ஜூன். ஆர்(2006):

ரேவதி.எஸ்.வர்மா இயக்கத்தில் 2006ஆம் வருடம் வெளியான “ஜூன்.ஆர்” படத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு கேமியோ ரோலில் சூர்யா நடித்திருந்தார். இந்த படத்தில் ஜோதிகா, குஷ்பூ சுந்தர், சரிதா, பிஜு மேனன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

7. சில்லுனு ஒரு காதல்(2006):

ஞானவேல் ராஜா தயாரிப்பில் என்.கிருஷ்ணா இயக்கத்தில் 2006ஆம் வருடம் வெளிவந்த திரைப்படம் “சில்லுனு ஒரு காதல்”. சூர்யாவும் ஜோதிகாவும் ஜோடியாக இணைந்து நடித்த கடைசி திரைப்படம் இதுதான். ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ராஜசேகர் ஒளிப்பதிவில் இந்த படத்தின் காட்சிகளை அந்தோணி எடிட்டிங் செய்திருந்தார். இந்த படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் டப் செய்யப்பட்டது. அழகான காதல் காட்சிகளுக்காக ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தது இந்த திரைப்படம். இந்தப் படம் வெளியான இரண்டு நாள் கழித்து சூர்யாவும் ஜோதிகாவும் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus