‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர்கள் படங்களை நேரடியாக OTT-யில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். சமீபத்தில், ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’, யோகி பாபு நடித்துள்ள ‘காக்டெய்ல்’, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள ‘டேனி’ ஆகிய தமிழ் படங்கள் OTT-யில் வெளி வந்தது.
இந்நிலையில், இன்று ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யில் ‘குன்ஜன் சக்சேனா : தி கார்கில் கேர்ள்’ என்ற ஹிந்தி படம் வெளியாகியுள்ளது. இதில் ஹீரோயினாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ஷரன் ஷர்மா இயக்கியுள்ளார். இப்படம் தமிழ் மொழியிலும் டப் செய்யப்பட்டு உள்ளதாம்.
இதன் தமிழ் வெர்ஷனில் ஹீரோயின் ஜான்வி கபூருக்கு ஐஸ்வர்யா பாஸ்கர் டப்பிங் பேசியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை அவரே தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் தான் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது.