தமிழில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் ‘முண்டாசுப்பட்டி’. இதில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் ராம் குமார் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.
இதில் மிக முக்கிய ரோலில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் மதுரை மோகன். இதனைத் தொடர்ந்து இவர் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் ‘வீரன்’, கரு.பழனியப்பனின் ‘கள்ளன்’ ஆகிய படங்களிலும், ‘ஈரமான ரோஜாவே’ என்ற டிவி சீரியலிலும் நடித்தார். தற்போது, நடிகர் மதுரை மோகன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது.
இவரது மறைவு குறித்து பிரபல நடிகர் காளி வெங்கட் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை ‘முண்டாசுப்பட்டி’ படத்தின்மூலம் வாய்ப்பளித்த இயக்குநர் ராம் குமார் அவர்களுக்கும், ‘வீரன்’ பட இயக்கு நர் ARK.சரவன் அவர்களுக்கும் மற்றும் ஐயாவுக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குநர்களையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை “முண்டாசுப்பட்டி” படத்தின்மூலம் வாய்ப்பளித்த இயக்குனர் @dir_ramkumar அவர்களுக்கும் pic.twitter.com/2xYw8QDw1S
— Kaali Venkat (@kaaliactor) December 9, 2023
“வீரன்” பட இயக்குனர் @ArkSaravan_Dir அவர்களுக்கும் மற்றும் ஐயாவுக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குனர்களையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்
— Kaali Venkat (@kaaliactor) December 9, 2023