தமிழ் சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அனிருத் ரவிச்சந்தர். இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படத்தின் சிங்கிள் டிராக் இவரை உச்சத்திற்கு கொண்டு சேர்த்து விட்டது. அது தான் தனுஷின் ‘3’ படத்தின் ‘வொய் திஸ் கொலைவெறி டி’ பாடல். இந்த சூப்பர் ஹிட் பாடலை தொடர்ந்து, படத்தில் இடம்பெற்ற மற்ற பாடல்களும் ரசிகர்களை ஈர்த்தது.
அதன் பிறகு இசையமைப்பாளர் அனிருத்திற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து ‘எதிர் நீச்சல், டேவிட், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, காக்கி சட்டை, மாரி, நானும் ரௌடி தான், வேதாளம், தங்க மகன், ரெமோ, ரம், விவேகம், வேலைக்காரன், தானா சேர்ந்த கூட்டம், கோலமாவு கோகிலா, பேட்ட, தும்பா, தர்பார், தாராள பிரபு, மாஸ்டர், டாக்டர்’ என இசையமைக்க படங்கள் குவிந்தது.
இப்போது ஒவ்வொரு இசை ரசிகர்களின் ப்ளேலிஸ்டிலும் அனிருத்தின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அனிருத் பாடிய பாடல்களும் ரசிகர்களை லைக்ஸ் போட வைத்திருக்கிறது. தற்போது, அனிருத் விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, சிவகார்த்திகேயனின் ‘டான்’, விஜய்யின் ‘பீஸ்ட்’, கமல் ஹாசனின் ‘விக்ரம், இந்தியன் 2’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தின் சொத்து மதிப்பு ரூ.60 கோடி என தகவல் கிடைத்துள்ளது.