‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

  • December 28, 2020 / 09:28 PM IST

சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படத்தின் ஆல்பமே மெகா ஹிட்டானது. அந்த படம் தான் ‘ரோஜா’. இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார். ‘ரோஜா’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமானார். தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானின் பல பாடல்கள் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் உள்ளது.

இப்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இயக்குநர் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’ (தமிழ்), நடிகர் விகரமின் ‘கோப்ரா’ (தமிழ்), தனுஷின் ‘அட்ராங்கி ரே’ (ஹிந்தி) என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இன்று (டிசம்பர் 28-ஆம் தேதி) உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus