சினிமாவில் பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் தமிழ் மொழியில் இசையமைத்த முதல் படமே மாதவனுடையது தான். அது தான் ‘மின்னலே’. இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இதில் மாதவனுக்கு ஜோடியாக ரீமா சென் நடித்திருந்தார்.

இந்த படத்துக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து ‘மஜ்னு, 12B, சாமுராய், லேசா லேசா, சாமி, கோவில், காக்க காக்க, செல்லமே, அருள்,தொட்டி ஜெயா, அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், உன்னாலே உன்னாலே, பீமா, தாம் தூம், வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், கோ, 7-ஆம் அறிவு, நண்பன், ஒரு கல் ஒரு கண்ணாடி, மாற்றான், துப்பாக்கி, என்னை அறிந்தால், அனேகன், இருமுகன், காப்பான்’ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து அசத்தினார்.

ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி பெயர் சுமா. ஹாரிஸ் ஜெயராஜ் – சுமா தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இப்போது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தமிழில் ‘துருவ நட்சத்திரம்’, ஜெயம் ரவி படம் , லெஜென்ட் சரவணன் படம், தெலுங்கில் நித்தினின் படம் என நான்கு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் சொத்து மதிப்பு ரூ.70 கோடி என தகவல் கிடைத்துள்ளது.
