எஸ்பிபி மிகவும் தன்னடக்கமான மனிதர் ஹாரிஸ் ஜெயராஜ்!

தமிழ் சினிமாவில் சிறந்த பாடகர்களில் ஒருவராக விளங்கிய எஸ் பி பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25ஆம் தேதி உடல் நிலை சரியில்லாமல் காலமானார்.

இவர் இழப்பால் தமிழ் சினிமா அதிர்ச்சி அடைந்துள்ளது. பல சினிமா பிரபலங்களும் அவரது ரசிகர்களும் தங்களது இரங்கலை இணையதளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள். இணையத்தில் எங்கு திரும்பினாலும் இவர் குரலில் வந்த பாடல்கள் ஒலிக்கிறது.

இவருக்கு வீடியோ பதிவு மூலம் தனது இரங்கலை தெரிவித்து ரசிகர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தைரியம் கூறி இருக்கிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

இந்த வீடியோவில் அவர் எஸ்பிபி மிகவும் தன்னடக்கமான மனிதர் என்றும் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருந்தாலும் அந்த வெற்றி அவருக்கு ஒரு நிமிடம் கூட தலைக்கனத்தை கொடுப்பதில்லை என்றும் அவரைப்போல தன்னடக்கமான உன்னதமான மனிதரை பார்த்ததே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

Share.