சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜஸ்டின் பிரபாகரன். இவர் இசையமைத்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘பண்ணையாரும் பத்மினியும்’.
இந்த படத்தில் ஹீரோவாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு ‘ஆரஞ்சு மிட்டாய், ஒரு நாள் கூத்து, ராஜா மந்திரி, உள்குத்து, காலக்கூத்து, தொண்டன், மான்ஸ்டர், தர்மபிரபு’ போன்ற பல படங்களுக்கு ஜஸ்டின் இசையமைத்தார்.
இப்போது ஜஸ்டின் பிரபாகரன் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ என்ற படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் கரோலின் சூசன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.