இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பயோ பிக்கான ‘800’-ல் முதலில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கவிருந்தார். ஆனால், இவர் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததிலிருந்து இப்படத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின், இப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகினார். சமீபத்தில், இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகர் மதுர் மிட்டல் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ளார். இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கடந்த வாரம் வெளியிடப்பட்ட இதன் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. தற்போது, படத்தை வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.