நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் சில தினங்களுக்கு முன் வெளியானது . இதனை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் . இந்த படத்தின் பூஜை சென்னையில் சில வாரங்களுக்குமுன் நடந்தது முடிந்தது . தயாரிப்பாளர் லலித் இந்த படத்தை தயாரிக்கிறார் . த்ரிஷா இந்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் .
இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது இதனை இருவருமே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர் . இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது .
இந்நிலையில் சமீபத்தில் விருது விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின் நடிகர் விஜய்யுடன் தற்போது தான் சண்டைக்காட்சியில் நடித்துவிட்டு வந்துள்ளேன் ரத்தம் வர வர விஜய் என்னை அடித்து மூஞ்சை குழப்பி விட்டார் மேலும் 20 வருடத்திற்கு முன் பார்த்த விஜய் மாதிரி இப்பவும் குணம் மாறாமல் உள்ளார் மேலும் மிகவும் இளமையாக உள்ளார் என்றும் கூறியுள்ளார் .