முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.
ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளாராம். படத்தை வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தையும் இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்க உள்ளாராம். இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது. இதன் ஷூட்டிங்கை வருகிற மார்ச் மாதத்தில் இருந்து ஹைதராபாத்தில் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ‘சைக்கோ’ படம் மூலம் ஃபேமஸான அதிதி ராவ் ஹைதரி ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.