தமிழ் சினிமாவில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படம் 2006-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஹீரோவாக நரேன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பாவனா நடித்திருந்தார். இப்படத்தினை மிஷ்கின் இயக்கியிருந்தார். இது தான் மிஷ்கின் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படமாம்.
‘சித்திரம் பேசுதடி’ படத்துக்கு பிறகு ‘அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ’ போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். இதுமட்டுமின்றி, ‘நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய படங்களை இயக்கியதுடன், நடிக்கவும் செய்துள்ளார் மிஷ்கின். இவர் மற்ற இயக்குநர்களின் சில படங்களிலும் நடித்திருக்கிறார்.
மிஷ்கின் இயக்கத்தில் நான்கு படங்களுக்கு ‘இசைஞானி’ இளையராஜா தான் இசையமைத்திருந்தார். தற்போது, மிஷ்கின் தான் இயக்கப்போகும் புதிய படத்துக்கு வேறு ஒரு இசையமைப்பாளரை அணுகியுள்ளாராம். அவர் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவாம். ஏற்கனவே கார்த்திக் ராஜா, அஜித்தின் ‘உல்லாசம்’, கமல் ஹாசனின் ‘காதலா காதலா’ உட்பட பல தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் நடிக்கப்போகிறார். அவருக்கு பவர்ஃபுல்லான போலீஸ் ரோலாம்.