தமிழ் சினிமாவில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படம் 2006-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஹீரோவாக நரேன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பாவனா நடித்திருந்தார். இப்படத்தினை மிஷ்கின் இயக்கியிருந்தார். இது தான் மிஷ்கின் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படமாம்.
‘சித்திரம் பேசுதடி’ படத்துக்கு பிறகு ‘அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ’ போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். இதுமட்டுமின்றி, ‘நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய படங்களை இயக்கியதுடன், நடிக்கவும் செய்துள்ளார் மிஷ்கின். இவர் மற்ற இயக்குநர்களின் சில படங்களிலும் நடித்திருக்கிறார். இயக்குநர் மிஷ்கின் இயக்க உள்ள புதிய படத்தில் ஹீரோயினாக ஆண்ட்ரியா நடிக்க உள்ளார்.
இது 2014-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ‘பிசாசு’ என்ற ஹாரர் படத்தின் பார்ட் 2-வாம். இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ‘சைக்கோ’ படம் மூலம் ஃபேமஸான ராஜ்குமார் பிச்சுமணி நடிக்க உள்ளார். ‘ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்து கொண்டிருக்கிறார். தற்போது, இப்படத்திற்காக ஒரே நாளில் இரண்டு பாடல்களுக்கான வரிகளை பாடலாசிரியர் கபிலன் எழுதி கொடுத்துள்ளார் என மிஷ்கின் கூறியுள்ளார்.
Kabilan has penned 2 songs in a day for Pisasu 2.
Thank You Kabilan.@Lv_Sri @Rockfortent @kbsriram16 @andrea_jeremiah @APVMaran @SureshChandraa @PRO_Priya @DoneChannel1 pic.twitter.com/C33D3ZdJAu
— Mysskin (@DirectorMysskin) November 11, 2020