வெளியானது வடிவேலுவின் அப்பத்தா பாடல் !

  • November 14, 2022 / 11:30 PM IST

தமிழில் மிகப் பிரமாண்ட படைப்புகளை வழங்கி வரும் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு வைகைப்புயல் வடிவேலு நாயகனாக நடித்து வரும், “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழ் மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தவர் வைகைப்புயல் வடிவேலு, அவரது காமெடி இல்லாத வீட்டு திரையே தமிழ்நாட்டில் கிடையாது. இணைய உலகமே அவரது காமெடியில் தான் இயங்கி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் நாயகனாக நடிக்கும் , “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் அறிவிப்பு வெளியான போதே படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது. படத்தின் டைட்டிலோடு வெளியான மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நாய் சேகர் படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது . சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி உள்ள இந்த பாடலை நடிகர் வடிவேலு பாடி உள்ளார் . பிரபு தேவா இந்த பாடலுக்கு நடன அமைப்பு செய்துள்ளார் . இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகிறது .

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus