தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் நடிகர் தனுஷ் முக்கியமானவர் . இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு வெளியான படம் திருச்சிற்றம்பலம் . இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 100 கோடி வசூல் செய்து சாதனை புரிந்து உள்ளது .
திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து இருந்தார் தனுஷ் . இந்த படம் செப்டம்பர் 29 அன்று திரையரங்கில் வெளியானது .யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் , இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . கலைப்புலி.எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்து இருந்தார் .
‘
செல்வராகவன் மற்றும் தனுஷ் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்து பணியாற்றிய படம் என்பதால் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது . படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும்பாலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் படம் வெளியான முதல் 33 நாளில் இந்தியாவில் மட்டும் 41.40 கோடி வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது