அட்டகாசமான லுக்கில் தனுஷ் !

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் நடிகர் தனுஷ் முக்கியமானவர் . இவர் நடிப்பில் வெளியான கடைசி படம் மாறன். இந்த படம் ஓ.டி.டியில் வெளியாகி மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் பல படங்களில் நடித்து வருகிறார் .

குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற கதையில் நடித்து முடித்துள்ளார் தனுஷ் . தற்போது வாத்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் தனுஷ் . மேலும் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவது , பாடுவது என பல துறைகளிலும் அசத்தி வருகிறார் தனுஷ் . அந்த வகையில் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார் .

இந்நிலையில் நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு (ஜூலை 28 ) நானே வருவேன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு புதிய போஸ்டரை பகிர்ந்து உள்ளார் . இந்த புகைப்படம் தற்போது தனுஷ் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது .

Share.