நாகசைத்தன்யா – அரவிந்த் சாமி இணைந்து நடித்துள்ள ‘கஸ்டடி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • May 12, 2023 / 12:48 PM IST

தெலுங்கு சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நாகசைத்தன்யா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கஸ்டடி’. இப்படம் இன்று (மே 12-ஆம் தேதி) தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை பிரபல தமிழ் பட இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் நாகசைத்தன்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் அரவிந்த் சாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ‘இசைஞானி’ இளையராஜாவும், அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.

தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus