நாகசைத்தன்யா – அரவிந்த் சாமி இணைந்து நடிக்கும் ‘கஸ்டடி’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த டீசர்!

  • March 16, 2023 / 06:52 PM IST

தெலுங்கு சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நாகசைத்தன்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘கஸ்டடி’. இந்த படத்தை பிரபல தமிழ் பட இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

இதில் நாகசைத்தன்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அரவிந்த் சாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு ‘இசைஞானி’ இளையராஜாவும், அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்து வருகின்றனர். இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது, இப்படத்தின் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற மே 12-ஆம் தேதி தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus