நாகசைத்தன்யாவின் ‘கஸ்டடி’ படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • June 6, 2023 / 10:57 AM IST

தெலுங்கு சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நாகசைத்தன்யா. இவர் நடித்த ‘கஸ்டடி’ திரைப்படம் கடந்த மே 12-ஆம் தேதி தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை பிரபல தமிழ் பட இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இதில் நாகசைத்தன்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அரவிந்த் சாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இதற்கு ‘இசைஞானி’ இளையராஜாவும், அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்திருந்தனர். தற்போது, உலக அளவில் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.15.85 கோடி என்று தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus