நடிகை சமந்தாவை விவாகரத்து செய்தது பற்றி உருக்கமாக பேசிய நடிகர் நாகசைத்தன்யா!

  • January 13, 2022 / 03:55 PM IST

தெலுங்கு திரையுலகில் ‘ஏ மாயா சேசவே’ என்ற திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக நாகசைத்தன்யா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியிருந்தார். இது தான் சமந்தா அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம். இப்படத்தில் சமந்தா ‘ஜெஸ்ஸி’ என்ற கேரக்டராக வலம் வந்திருந்தார். இதில் இவரது நடிப்பு அனைவரையும் ஈர்த்து விட்டது.

இது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ (தமிழ்) படத்தின் தெலுங்கு வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் வெர்ஷனில் சமந்தா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் திரையுலகில் ‘பாணா காத்தாடி’ மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்த சமந்தா ‘மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தங்க மகன்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். இப்போது தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாஸ் காட்டும் சமந்தாவிற்கு, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

2017-ஆம் ஆண்டு தனது முதல் படத்தின் கதாநாயகனான நாகசைத்தன்யாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 2-ஆம் தேதி நடிகை சமந்தாவும், நாகசைத்தன்யாவும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

தற்போது, நாகசைத்தன்யா மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “எங்கள் இருவரின் நலனையும் கருத்தில் கொண்டு நானும் சமந்தாவும் இணைந்து எடுத்த நல்ல முடிவு தான் விவாகரத்து. இந்த விஷயத்தில் சமந்தா சந்தோஷமாக இருக்கிறார் என்றால், எனக்கும் சந்தோஷம் தான்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus