சமந்தாவை விவாகரத்து செய்வதற்கான காரணம் இதுவா?… பேட்டியில் உண்மையை போட்டுடைத்த நாகசைத்தன்யா!

  • December 16, 2021 / 07:04 PM IST

தெலுங்கு திரையுலகில் ‘ஏ மாயா சேசவே’ என்ற திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக நாகசைத்தன்யா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியிருந்தார். இது தான் சமந்தா அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம். இப்படத்தில் சமந்தா ‘ஜெஸ்ஸி’ என்ற கேரக்டராக வலம் வந்திருந்தார். இதில் இவரது நடிப்பு அனைவரையும் ஈர்த்து விட்டது.

இது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ (தமிழ்) படத்தின் தெலுங்கு வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் வெர்ஷனில் சமந்தா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் திரையுலகில் ‘பாணா காத்தாடி’ மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்த சமந்தா ‘மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தங்க மகன்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். இப்போது தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாஸ் காட்டும் சமந்தாவிற்கு, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

2017-ஆம் ஆண்டு தனது முதல் படத்தின் கதாநாயகனான நாகசைத்தன்யாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி நடிகை சமந்தாவும், நாகசைத்தன்யாவும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

தற்போது, நாகசைத்தன்யா மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “படங்களில் அவர் ஏற்று நடிக்கும் கேரக்டர்கள்” குறித்து கேட்கையில், “நான் எந்த ஒரு படத்தில் ஒப்பந்தமாவதற்கு முன்பும், அந்த ரோல் என்னுடைய குடும்பத்தையும், கௌரவத்தையும் பாதித்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பேன்.

அதேபோல், என்னுடைய குடும்பத்தினரை சங்கடப்படுத்தும்படியான ரோலில் நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன்” என்று பதில் சொல்லியிருக்கிறார். இந்த பதிலின் மூலம் சமந்தா சில சர்ச்சைக்குரிய ரோல்களை ஏற்று நடித்தது தான் இவர்களின் விவாகரத்துக்கு காரணமோ? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus