திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் அறிமுகமான முதல் தெலுங்கு படம் ‘விக்ரம்’. 1986-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குநர் வி.மதுசூதனன் ராவ் இயக்கியிருந்தார். அதன் பிறகு பல தெலுங்கு படங்களில் நடித்த நாகார்ஜுனா ஹிந்தி திரையுலகில் 1990-ஆம் ஆண்டு ‘ஷிவா’ படம் மூலம் என்ட்ரியானார்.
‘ஷிவா’-விற்கு ஹிந்தி, தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் செம பிஸியாக நடித்து வந்தார் நாகார்ஜுனா. பின், 1997-ஆம் ஆண்டு வெளியான ‘ரட்சகன்’ படம் மூலம் தமிழ் திரையுலகிலும் கால் பதித்தார். இந்த படத்தை இயக்குநர் பிரவீன் காந்தி இயக்கியிருந்தார். ‘ரட்சகன்’ படத்துக்கு பிறகு தமிழில் ராதாமோகனின் ‘பயணம்’, கார்த்தியின் ‘தோழா’ ஆகிய படங்களில் நாகார்ஜுனா நடித்தார்.
இவரின் பல தெலுங்கு படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாவதால், தமிழ் நாட்டிலும் நாகார்ஜுனாவிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில், நாகார்ஜுனா நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு மெகா ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2011-யில் ரிலீஸான தமிழ் படம் ‘மங்காத்தா’.
அஜித் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோலில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்திருந்தார். ஆனால், அந்த ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் வெங்கட் பிரபுவின் முதல் சாய்ஸாக இருந்தது நாகார்ஜுனா தானாம். அப்போது கால்ஷீட் பிரச்சனை காரணமாக நாகார்ஜுனாவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.